அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் அடுத்த ஸ்டேப் இதுதான்..!!
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகமல் இருந்ததால்
அந்த வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,
டெல்லி புதிய மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அவரை தற்போது கைது செய்துள்ளனர்.
இதே மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கேசிஆர் மகள் கே.கவிதா கைது செய்யப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இப்போது டெல்லி முதல்வரின் இல்லத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்று கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தற்போது இந்த வழக்கிற்கு தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், கெஜ்ரிவாலை கைது செய்யத் தடை விதிக்க மறுத்தது.
இந்த தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
அதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் இந்திய கூட்டணி கட்சிகள் புகார் அளித்துள்ளன. காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்கி, திமுகவின் சார்பில் எம்.பி வில்சன், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரைன் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப மத்திய விசாரணை அமைப்புகள் அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில் கைது செய்யப்பட்டிருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் வெளியிட்டுள்ல வீடியோவில், இந்தியாவிற்குள்ளும் வெளியேயும் நாட்டை பலவீனப்படுத்தும் பல சக்திகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாம் விழிப்புடன் இருந்து, இந்த சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை தோற்கடிக்க வேண்டும் என கேட்டுகொண்ட அவர், கெஜ்ரிவாலை நீண்ட காலம் சிறையில் அடைக்க எந்தச் சிறையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..