இது தான் பாஜகவிற்கு தெரிந்த அரசியல்..! அண்ணாமலையை தாக்கி பேசிய திருச்சி வேலுசாமி..!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்
அப்பொழுது அவர் பேசுகையில் தமிழக அரசியலில் இரண்டு மூன்று ஆண்டுகளாக தொடர் தொல்லைகளாக வந்துள்ளது. அது இன்று உச்சத்திற்கு சென்றுள்ளது அரசியலுக்கு சம்பந்தமும் இல்லாத சின்னப் பையன், தற்போது கோவில் மாடாக சுற்றித் திரியும் அவரை அடிமாடாக மாற்றி விடுவோம் என அண்ணாமலையை குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார்.
கர்நாடகாவில் இருக்கும் பொழுது கன்னடம் என்று சொல்வதில் பெருமை அடைப்பவர் என்று கூறியவர். பிறகு தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு அதனை மாற்றிப் பேசுகிறார். அவர் ஐபிஎஸ் பதவி ராஜினாமா செய்வதற்கு காரணம் அவர் சொல்கிறார் அல்லது நாங்கள் சொல்லட்டுமா பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் சிறைக்கு செல்ல வேண்டிய நேரிடும் என்ற காரணத்தினாலே அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தார் .
என்னை விட வயதில் சிறியவராக இருக்கும் பிரதமர் மோடி எங்கள் தலைவரை பப்பு என்று அழைக்கிறார், அண்ணாமலை ராகுல் காந்தியை விட வயதில் பெரியவர் அவரை ஒருமையில் பேசுகிறார் இதுதான் அவருக்கு தெரிந்த அரசியல் தந்திரங்கள்.
நான் ஒரு விவசாயி என்னால் 20 ஆயிரம் ரூபாய் என் வீட்டிற்கு வாடகை செலுத்த முடியவில்லை ஆனால் அண்ணாமலை அவருக்கு லட்சக்கணக்கில் வீடு வாடகை கட்ட பணம் எங்கிருந்து வருகிறது.
அண்ணாமலைக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் தெருவில் சுற்றி தெரிந்தவர், கன்னடனா தமிழனா என்று தெரியவில்லை, அவர் ஒரு ஆணா அல்லது திருநங்கையா என்று தெரியவில்லை அந்த அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருப்பதாக ஒருமையில் பேசி உள்ளார்.
அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார் அவரை ஏன் நீ தலைவனாக ஏற்றுக் கொள்கிறாய் என பிரதமர் மோடியை இழிவாகப் பேசி உள்ளார். பாஜகவில் இருக்கும் 260 உறுப்பினர்களின் கிரிமின்களாக இருப்பதாகவும் , அதனை நான் கூறவில்லை உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிட்ட இருப்பதாக அவர் கூறினார்.
செல்வப் பெருந்தகை மீது ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது தான் ஆனால் அது போலியானது என்று காவல்துறை விசாரணையில் கண்டறியப்பட்டு அந்த வழக்கு திரும்ப பெறப்பட்டதாகவும், இதைக் குறித்தும் காங்கிரசின் கொள்கை குறித்தும் நாங்கள் நேரடியாக ஒரு மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறோம்.
பாஜகவினர் எங்கு வர சொல்கிறாரோ அங்கு நாங்கள் வருகிறோம் அது கமலாலயம் ஆக இருந்தாலும் நாங்கள் வருகிறோம் என அவர் சவால் விட்டுள்ளார். தங்கள் தலைவரைப் பற்றி ஒருமையில் பேசியதால்தான் நாங்கள் அவர்களை ஒருமையில் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு பேசியதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லை என்றால் இதைவிட கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் .
மேலும் அவர் புறம்போக்கு சூடு சொரணை உள்ளதா என்று பல கடுமையான சொற்களால் சாடி உள்ளார். பல்வேறு மாநிலங்கள் பல்வேறு பிரச்சனைகள் நடக்கும் பொழுது எதுவும் செய்யாதவர்கள் பாஜகவினர்கள் பாஜக தோன்றிய வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..