ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்துக்கு இது தான் காரணம்..!! ரசிகர்களுக்கு வேண்டுகோள்..!!
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் பொல்லாதவன், ஆயிரதத்தில் ஒருவன், ஆடுகளம் மற்றும் தெய்வத்திருமகள் போன்ற படங்களுக்கு இசையமைத்தி முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக இடம் பிடித்தார்.
அதன் பின் கடந்த 2013ம் ஆண்டு பின்னணி பாடகர் சைந்தவியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.., இவர்களுக்கு 2020ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.., ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைப்பில் வரும் அனைத்து பாடல்களும் அருமை என சொல்லலாம்.
அதாவது பையா படத்தில் வரும், அடடா மழை டா அட மழை டா, தெறி படத்தில் வரும் உன்னாலே என்னாலும் என் ஜீவன் வாழுதே என்ற பாடல்., மற்றும் அசுரன் படத்தில் வரும் எள்ளு வாயே பூக்களையே என்ற பாடல் உட்பட பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையில் தற்போது தங்கலான், வணங்கான், அமரன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வீர தீர சூரன் உள்ளிட்ட படங்களிலும் சில பாடல்களை பாடியும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் நாங்கள் பிரிய போகிறோம் என சமூக வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
“நாங்கள் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். 11 ஆண்டுகள் நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம், நன்கு யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் இருவரும் எங்கள் மன நிம்மதிக்காக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்களது இந்த முடிவை ஊடக நண்பர்கள், ரசிகர்கள் அனைவரும் புரிந்து கொண்டு எங்களுக்கு தனிப்பட்ட நேரத்தை அளிக்க வேண்டும்” என இவ்வாறே அவர் பதிவிட்டிருந்தார்.
ஜிவி பிரகாஷ் – சைந்தவி இவர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு இடையேயான ஏற்பட்ட பிரச்சனையே இவர்களது பிரிவுக்கு காரணம் எனவும், இவர்களது பெற்றோர் இடையே ஏற்பட்ட மனக்கசப்பினால், கடந்த 6 மாதங்களாக இருவரும் பிரிந்து தனி தனியே வாழ்ந்து வந்துள்ளனர்.,
இவர்களது பிரிவுக்கு இவர்களது பெற்றோர் காணரமாக இருக்கலாம் என்றும் வேறு எந்த காரணமும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.. மேலும் இவர்களின் விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..