என் மனைவியை பிரிய இதுதான் காரணம்..!! மனம் திறந்த ஜெயம்ரவி
நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய தற்போதைய நிலை குறித்தும், தன்னுடைய குடும்பத்தினர் குறித்தும் எமோஷனலாக பேசியிருந்தார். அப்போது தன்னுடைய அண்ணன், அப்பா தன்னிடத்தில் என்ன விரும்புகிறார்கள் என்பது பற்றி அதில் பேசி இருக்கிறார்.
நடிகர் ஜெயம் ரவி ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி பல வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்த ஜெயம் ரவி சமீபத்தில் social mediaவில் அதிகமாக பேசப்படுகிறார்.
இதற்கு காரணம் அவருடைய குடும்ப பிரச்சனை தான். ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்தகொண்ட ஜெயம் ரவி சில மாதங்களுக்கு முன்பு ஆர்த்தியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாகவும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் சமீத்தில் அவரே அவருடைய instagram pakkaththil தெரிவித்து இருந்தார்..
இது பெரிய அளவில் மக்களிடம் பேசப்பட்ட நிலையில் ஆர்த்தியை பலரும் விமர்சித்து வந்தனர். சில தினங்களில் ஆர்த்தி ஒரு போஸ்ட் போட்டு இருந்தார். அதில் நான் ஜெயம் ரவியோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று முயற்சி செய்கிறேன். எங்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது உண்மை தான் ஆனால் விவாகரத்து முடிவு என்னுடைய முடிவு அல்ல.
அது அவருடைய தனிப்பட்ட முடிவு நான் அவரிடம் குழந்தைகளின் வாழ்க்கைக்கு பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அது சிலரால் தடுக்கப்படுகிறது என்று கூறியிருந்தார். அப்போது ஜெயம் ரவிக்கு கெனிஷா என்ற பாடகியோடு தொடர்பு இருப்பதாகவும் அதனால் தான். தன் மனைவியோடு பிரச்சனை என்றும் சில சர்ச்சைகள் பரவியது.
அதற்கு பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்து இருந்தார். இப்படியான நிலையில் புதியதாக ஜெயம் ரவி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில் தன்னுடைய குடும்ப வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கும் விளக்கம் அளித்து இருக்கிறார். சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தாங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பலர் பலவிதமாக அடுத்தவர்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் பல வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன் என்னுடைய நடிப்பு பிடிக்கவில்லை என்றால் யார் வேண்டுமென்றாலும் குறை சொல்லலாம். ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஏனென்றால் நான் தான் அந்த வலிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அங்கு என்ன நடக்கிறது என்பது என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. என் கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி என்னை முழுமையாக தெரிந்த ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரியும். எல்லோரையும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நான் அனுமதித்தது கிடையாது.
இப்போதைய காலத்தில் நான் என்ன உண்மையான மனநிலையில் இருக்கிறேன் என்பது அவர்களுக்கு மட்டும் தெரியும். என்னுடைய குடும்பத்தினர் என்னை நன்றாகவே கவனித்துக் கொள்கிறார்கள். அவர்கள் என்னை நன்றாக புரிந்து கொண்டார்கள் என்று ஜெயம் ரவி பேசியிருக்கிறார்.
அதோடு ஜெயம் ரவியின் அப்பா திரைப்பட எடிட்டர் மோகன் என்பது அனைவருக்கு தெரியும். அதுபோல ஜெயம் ரவி உடைய அண்ணன் தனி ஒருவன் படத்தை இயக்கியது ராஜா என்பதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. அவர்கள் இருவர் பற்றியும் ஜெயம் ரவி பேசியிருக்கிறார்.
அதில், என்னுடைய அப்பா நான் சினிமாவில் நல்ல கெத்தான மாஸான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று விரும்புவார். நான் திரைக்கு வந்தால் மக்கள் கொண்டாட வேண்டும், என்னை பாராட்ட வேண்டும் என்று சாதாரண எல்லா அப்பாக்களும் நினைப்பது போலத்தான் என்னுடைய அப்பாவும் நினைப்பார்.
அதுபோல என்னுடைய அண்ணன் ராஜா தனி ஒருவன் படம் போன்று இன்னும் நிறைய நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புவார். என்னுடைய குடும்பத்தினர் தான் என்னை புரிந்து வைத்திருக்கிறார்கள். சில நேரங்களில் பல பிரச்சனைகள் வர தான் செய்கிறது.
பிரச்சனைகள் வரும்போது நான் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருப்பேன் பிறகு இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கலாம் என்று நானே யோசித்து அதிலிருந்து வெளிவருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.. என்று அந்த பேட்டியில் ஜெயம் ரவி பேசி இருக்கிறார்.
மேலும் ஜெயம் ரவி பேசுகையில் சமூக வலைத்தளத்தில் சமீபகாலமாக என்னைப் பற்றி வரும் சர்ச்சைகளையும் என்னுடைய குடும்பத்தினர் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் என்னை விட அதிகமாக மெச்சூர்டாக இருப்பதால் வெளியே என்ன வேணாலும் பேசட்டும் நீ தைரியமாக இரு என்று நம்பிக்கை கொடுக்கிறார்கள். இதுவும் கடந்து போகும் என்பது தான் என்னுடைய குடும்பத்தினர் எனக்கு சொல்லும் வார்த்தை என தன்னுடைய குடும்பத்தினர் தனக்கு கொடுக்கும் சப்போர்ட் குறித்து ஜெயம் ரவி பேசியிருக்கிறார்.
சத்யா.கே
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..