இது ஒரு போராட்டத்தின் வெற்றி…!! மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பேட்டி…!!
கடந்த அக்டோபர் 5ம் தேதி ஹரியானா மாநிலத்தின் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சட்டபேரவை தேர்தல் நடைபெற்றது.. அதன் பின்னர் இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக சார்பில் போட்டியிட்ட யோகேஷ் குமாரைவிட 6,015 வாக்குகள் அதிகம் பெற்று வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். நடந்து முடிந்த ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத் 65,080 வாக்குகளும், யோகேஷ் குமார் 59,065 வாக்குகளும் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் சுரேந்தர் 10,15 8 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்ட கவிதா ராணி 1,280 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்துள்ளார்..
இந்த வெற்றிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த்து பேசிய வினேஷ் போகத், இது ஒரு பெண்ணின் போராட்டம். போராட்ட பாதையை தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த வெற்றி உரித்தானது. இது போராட்டத்தின் வெற்றி. இந்த நாடு என் மீது வைத்துள்ள அன்பையும், நம்பிக்கையையும் காப்பாற்றுவேன் என்று தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..