பாஜகவில் சேரலனா இதான் நடக்கும்..!! பகீர் தகவலை வெளியிட்ட முக்கிய பிரமுகர்..!! பீதியில் இருக்கும் அவர்..?
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருந்தாலும் அவரே முதல்வராகத் தொடர்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் சிறையில் இருந்து கொண்டே உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதாக டெல்லி அமைச்சர் அதிஷி சில கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
அதாவது கெஜ்ரிவாலுக்கு பிறகு இப்போது அமலாக்கத் துறை தன்னை கைது செய்யத் திட்டம் போட்டு இருப்பதாகக் கூறிய அதிஷி, கூடவே சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சதா ஆகிய ஆம் ஆத்மி தலைவர்களையும் அமலாக்கத் துறை கைது செய்யத் திட்டம் தீட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசு கையில், “விரைவில் ஆம் ஆத்மீ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டுகள் நடத்தப் போவதாகவும், நாங்கள் சிறைக்கு செல்லப்போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்ததை தொடர்ந்து தற்போது ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களை பாஜக குறிவைத்து தாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மீ பாஜகவில் இணைய வேண்டும் என பலமுறை கேட்டார்கள். ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம். அதனால் எங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் கொடுத்தார்கள். ஒன்று பாஜகவில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வது. இரண்டாவது பாஜகவிற்கு எதிராக செயல்பட்டால் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்வது.., அனைத்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களையும் சிறையில் அடைக்க பிரதமர் மோடியே முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் சிலர் எங்களுக்கு கால் செய்து தகவல் தெரிவித்தனர்.
நாங்கள் அதை மறுத்துவிட்டோம். அதன் பின் சத்யேந்தர் ஜெயினை கைது செய்தார்கள், பிறகு மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் தொடங்கி இப்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரை கைது செய்துள்ளார்கள். இவர்கள் மட்டுமின்றி ஆம் ஆத்மீயின் முக்கிய பிரமுகர்களான சதா, துர்கேஷ் பதக் மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகிய நான்கு பேரை அவர்கள் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பின் எங்கள் கட்சி சிதைந்துவிடும் என பாஜக நினைத்து கொண்டிருந்தது. ஆனால் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி போராட்டம் நடத்தியதால் பாஜக மிரண்டு போனது. அதன் காரணமாக அடுத்த கட்ட தலைவர்களைக் கைது செய்ய பாஜக மீண்டும் திட்டமிட்டுள்ளது.
பாஜகவின் திட்டபடியே ஆம் ஆத்மீ கட்சியின் வீடுகளில் ரெயிடு நடக்கும், எங்களை கைது செய்து விசாரணை என்ற பெயரில் சிறையில் அடைத்து சித்திரவதை செய்யலாம்.., ஆனால் இப்படி கொடூர செயலில் ஈடுபடும் பாஜகவின் மோடிக்கும் அவருக்கு ஆமாம் சாமி போடும் அண்ணாமலைக்கு தேர்தல் முடிவில் தெரியும்.
நாங்கள் பதிலடி கொடுக்க தேவையில்லை.., இந்திய மக்களே பதிலடி கொடுத்துவிடுவார்கள். பாஜக எங்களை மிரட்டிய ஆடியோக்களை வெளியிட்டு விடுவோமோ என்ற பீதியில் தான் அண்ணாமலை எங்களுக்கு பணத்தின் ஆசை மற்றும் பதவி ஆசை காட்டுகிறார்.
ஆம் ஆத்மீயை, பாஜகவை போல பணத்தின் மீது ஆசை கொண்டவர்கள் என நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம். எங்கள் கடைசி மூச்சு வரை அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்போம். எங்களைச் சிறையில் தள்ளினால் புதிய நபர்கள் வந்து பொறுப்பேற்பார்கள்” என்றார்.
இந்த டெல்லி மதுபான கொள்கை விவகாரம் ஆம் ஆத்மிக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறிவிட்டது . கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை ஜாமீனில் வெளியே எடுக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..