சாப்பிட்ட உடன் நீங்கள் செய்யும் இந்த தவறால்..! உங்கள் உடல்..?
அன்றாட வாழ்க்கையில் தினமும் செய்ய வேண்டிய நல்ல பழக்கம் இருக்கிறது. செய்யக்கூடாத தீய பழக்கமும் இருக்கிறது. அதிலும் முக்கியமாக சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத பழக்கங்கள். அப்படி செய்வதால் உடலுக்கு என்ன விளைவுகள் ஏற்படுத்தும் என்பது பற்றி பார்க்கலாம்.
சாப்பிட்டவுடன் சிலருக்கு டீ, காபி குடிக்கும் பழக்கம் டீ மற்றும் காபியில் அமிலத்தன்மை இருப்பதால், நாம் சாப்பிட்ட உணவை செரிக்க விடாமல் செய்துவிடும்.
இதனால் வயிறு மற்றும் குடலுக்கு செல்ல வேண்டிய புரதச்சத்து செல்லாமல் தடுக்கிறது. குறைந்தது 2 மணி நேரமாவது டீ, காபி, குடிக்க இடைவெளி விட வேண்டும்
புகைப்பழக்கம் புற்று நோய் உண்டாகும் என தெரிந்தும் கூட சிலர் புகை பிடிக்கிறார்கள்.., அதுவே உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது தான்.
அதிலும் சாப்பிட்ட உடன் புகை பிடித்தால், புற்றுநோய் விரைவில் வரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சாப்பிட்ட பின் உறங்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும்.., அது தவறு இல்லை ஆனால் சாப்பிட்ட சில நொடியிலேயே உறங்க செல்வது மிகவும் உடலுக்கு கெடுதல். சாப்பிட்ட உடன் உறங்க செல்வதால் செரிமானம் ஆவதற்கு தாமதம் ஆகிறது.
சாப்பிட்ட உடன் உறங்க செல்வதால், செரிமானத்திற்கு தேவையான ரத்தம் ஓட்டம் கிடைக்காமல். குடல் கோளாறு ஏற்படுகிறது . சாப்பிட்ட பின் குறைந்தது 1 மணி நேரமாவது உறங்குவதற்கு இடைவெளி விட வேண்டும் அது மதியமாக இருந்தாலும், இரவாக இருந்தாலும்.
ஒரு சிலர் சாப்பிட்டு முடித்த பின் குளிக்கும் பழக்கம் வைத்து இருப்பார்கள். முக்கியமாக ஞாயிற்றுகிழமை வெகு நேரம் தூங்கிவிட்டு எழுந்த சில மணி நேரத்தில் சாப்பிட சென்று விடுவார்கள். சாப்பிட்டு முடித்த பின் குளிக்க செல்வார்கள்.
குளிக்கும் பொழுது நம் உடலில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். சாப்பிட்டு முடித்த பின் குளித்தால் ரத்த ஓட்டம் குறையும், செரிமானமாக வேண்டிய உணவு வயிற்றிலேயே தங்கிவிடும். இதனால் வயிறு சில சமயங்களில் உப்பசமாக காணப்படும்.
சாப்பிட்ட உடன் செய்யக் கூடாத மிக முக்கியமான ஒன்று உடற்பயிற்சி, சாப்பிட்ட பின் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
குறைந்த 30 நிமிடத்திற்கு பின் ஆவது நடக்க தொடங்கலாம், முடியாத பட்சத்தில் 5 நிமிடத்திற்கு பின்னர் மெதுவாக நடக்கலாம்.
உடற்பயிற்சியை 45 நிமிடத்திற்கு பின் செய்ய தொடங்கலாம்.