செவ்வாய் தோஷம் நீங்க இந்த பரிகாரம் சிறந்தது..!!
பூர்வ ஜென்ம வினைகளும், பாவங்களுமே தோஷங்களாக மாறுகின்றன. பூர்வ ஜென்மத்தில் பெற்றோர்களை சரியாக கவனித்து கொள்ளாதவர்களே, மறுஜென்மத்தில் செவ்வாய் தோஷத்துடன் பிறக்கின்றனர். சகதோர சகோதரிகளிடம் சொத்துக்களை ஏமாற்று பவர்களுக்கு, சொத்துக்களை ஒருவரே அபகரித்து செல்பவர்கள், மற்றும் அநியாய விலைக்கு நிலத்தை ஏமாற்றி விற்பவர்கள். இவர்களை பூமிகாரகனான செவ்வாயின் கோபம் மற்றும் தோஷம் தாக்கப்படுகிறது.
பிறக்கும் பொழுதே ஒரு சிலர் செவ்வாய் தோஷத்துடன் பிறப்பார்கள் அதாவது 2,4,7,8,12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் அமைந்திருக்கும்..,அதை செவ்வாய் தோஷம் என்கிறோம்.
செவ்வாய் தோஷம் நீங்க இந்த பரிகாரங்கள் மிக முக்கியமானது..
* செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் புளிசாதம், புளிச்ச கீரையை உணவில் குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* செவ்வாயின் ஆதிக்கம் நிலத்திற்கே அதிகம் இருக்கும் எனவே உடன் பிறந்தவர்களிடம் அதிக சண்டையோ, நிலம் முதலான தகராறில் ஈடு பட கூடாது.
* ரத்த தானம் செய்ய வேண்டும்.., இயன்ற வரை மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
* ஊர் எல்லையில் இருக்கும் காவல் தெய்வங்களுக்கு செம்பருத்தி, விருட்சி பூ வைத்து வழிபடலாம்.
* வீட்டிலேயே வில்வம் அல்லது வன்னி மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்..
* செவ்வாய்கிழமை தோறும் முருக பெருமானுக்கு சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்ததும் துவரை தானம் செய்து வந்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்..
* செவ்வாய் அன்று மதியம் 3 மணி முதல் 4 மணிக்குள் ராகு காலத்தில் சண்டிகா ஸ்தோத்திரம் படித்து வந்தால் திருமணம் தடைகள் நீங்கிவிடும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்