பிறந்த குழந்தைக்கு இந்த பரிசோதனை அவசியம்..!
குழந்தை பிறந்ததும்..,குஷியில் அவர்களை தூக்கி கொஞ்ச ஆரமித்து விடுகிறோம். அவர்கள் கை,கால்கள் ஆரோக்கியத்துடன் பிறந்து இருக்கிறார்களா என்று பார்க்கிறோம். ஆனால் சில பரிசோதனையை செய்ய மறந்து விடுகிறோம்.
அவை என்ன..? ஏன் செய்ய வேண்டும் ..? என்பது பற்றி பார்க்கலாம்.
குழந்தை பிறந்து சில மணிநேரம் கழித்து தான், நம் கையில் கொடுக்கிறார்கள். கை கால்கள் ஆரோக்கியமாக இருக்கிறதா.., குழந்தை யாரோ போல் இருக்கிறது என்று எல்லாம் பார்க்கிறோம்.
அதே போல் குழந்தைக்கு கேட்கும் திறன் உள்ளதா, என்றும் பார்க்க வேண்டும். அது தான் மிக முக்கியம். குழந்தையை கையில் வாங்கியதும், அவர்களின் செவியோரம் சென்று ஓசை எழுப்பலாம். அல்லது பேச்சு கொடுக்கலாம்.
அவர்கள் அசைவு கொடுத்து முழித்து விட்டார்கள் என்றால், அவர்களுக்கு கேட்கும் திறன் உள்ளது என்று அர்த்தம். அதை (Otoacoustic Emissions (OAE) என்று அழைப்பார்கள். அது காதின் உள்புறம் உள்ள காக்ளியா எனும் பகுதி சரியாக இயங்குகிறது என்று பார்ப்பதற்கு அர்த்தம்.
குழந்தை அசைவு கொடுக்கவில்லை என்றால், அவர்கள் மயக்கத்தில் இருக்கிறார்கள் அல்லது தூங்கி கொண்டு இருகிறார்கள் என நினைத்து விட்டுவிடக் கூடாது. அதை அலட்சியமாக விட்டால் குழந்தைக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் .
அதற்கு முன் குழந்தைக்கு தாய் பால் கொடுக்க வேண்டும்.., குழந்தையின் செவியோரம் அசைவு கொடுத்தும் அவர்கள் அசையவில்லை என்றால், மருத்துவரை சென்று பரிசோதிப்பது சிறந்தது. என குழந்தைகள் நல மருத்துவர்..”ஸ்ரீநிவாஸ்” கூறுகிறார்.
மேலும் இதுபோன்ற பல தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி