“உதயநிதி துணை முதலமைச்சர்” என்பது குறித்து தொல்திருமாவளவன் நச் பதில்..!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அனைத்து சமூகமும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு வழிவகுக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திருமானூர் அருகே உள்ள இலந்தை க்கூடம் கிராமத்தில் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக வெங்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் திருமாவளவன் நேரில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்றைக்கு ஆஜராக சொல்லி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
அதனை நேரில் ஆஜராகி ரத்து செய்யும்படி கோரிக்கை வைத்தேன் அது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனி அடுத்தடுத்த வாய்தாக்களில் பங்கேற்க நீதிபதி ஆணையிட்டு இருக்கிறார் இது போன்ற வழக்குகளை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நூற்றுக் கணக்கானவர்களை பலிவாங்கி இருக்கிறது இதுவரையில் 377 உடல்கள் மீட்கப் பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன நூற்றுக் கணக்கான குடும்பங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டிய பொருப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே ஒன்றிய அரசு இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் அதன் அடிப்படையில் மறுவாழ்வுக்காகவும் மறு கட்டுமானத்திற்காகவும் போதிய இழப்பீட்டுத் தொகையையும் இந்திய அரசு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றார். ஒன்பதாம் தேதி கேரள முதல்வர் மினராய் விஜயன் அவர்களை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் 15லட்சம் நிவாரண நிதி வழங்க இருக்கிறோம் என தெரிவித்த அவர் உதயநிதி துணை முதலமைச்சராக வேண்டும் என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம் அதில் நான் தலையிட விரும்பவில்லை எனவும் கூறினார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..