களைகட்ட ரெடியாகும் தூத்துக்குடி துறைமுகம்.. இன்னும் 8 நாட்கள் தான்.. முடிவுக்கு வரும் மீன்பிடி தடை காலம்..
மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டும் இதனை மீன் பிடி தடை காலம் என்று அழைக்கலாம்.
அதன் படி இந்த வருடத்திற்கான மீன் பிடி தடைக்கால் ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் எதுவும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார், திரேஸ்புரம் ஆகிய இடங்களில் மொத்தம் 551 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த 61 நாட்கள் தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைப்பது, மீன் பிடி வலைகளை சரி செய்வது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.
மேலும் புதிய வலைகளையும் வாங்கி வைத்து கொள்வார்கள் . மீனவர்களுக்கு இந்த விசைப்படகுகளை சீரமைக்க பல லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இந்த தடைக்காலம் முடிய 8 நாட்களே உள்ள நிலையில், மீனவர்கள் தங்கள் படகுகளை கடலுக்குள் செலுத்தியும், படகில் உள்ள இயந்திரங்களை இயக்கியும் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தடைக் காலத்தால் கடந்த 61 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட தூத்துக்குடி துறைமுகம், இன்னும் ஒரு வாரத்தில் களை கட்டத் தொடங்கும். மேலும் இப்போது ஏறுமுகமாக உள்ள மீன்களின் விலையும் குறையும் என்று சொல்லப்படுகிறது.
-பவானிகார்த்திக்