ஸ்மார்ட் கார்டு தொலைந்தவர்கள் கவனத்திற்கு..! இனி …?
புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு வழக்கத்தைவிட மிக அதிகமானது.
காரணம் மிக முக்கியமான மகளிர் உரிமை தொகை வாங்க வேண்டுமானால், அவர்கள் கண்டிப்பாக குடும்ப அட்டை வாங்கவேண்டும்,திருமண உதவி தொகை திட்டம் மற்றும் கர்ப்பிணி உதவி தொகை திட்டத்தின் பலனை பெறவும் குடும்ப அட்டை மிக அத்தியாவசியமானது.
இந்நிலையில் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதால், புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு வழக்கத்தைவிட மிக அதிகமாகி உள்ளது.
இந்நிலையில், மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதன்படி புதிய கார்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
தேர்தலுக்கு முன்பு ரேஷன் கார்டு தயாரன நிலையில் நடத்தை விதிமுறைகள் காரணமாக குடும்ப அட்டை அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில், தேர்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி இந்த வாரம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனை தொடர்ந்து ஸ்மார்ட் கார்டு தொலைந்தவர்கள் மற்றும் திருத்தம் செய்தவர்களுக்கும் புதிய ஸ்மார்ட் கார்டு தடையின்றி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் குடும்ப அட்டைகள் பெற https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் நேரடியாக இனி விண்ணப்பம் செய்யலாம். அல்லது இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் நகல் ஸ்மார்ட் கார்டு, கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்கம் போன்ற அத்தனை சேவைகளையும் மேற்கொள்ளலாம்.
-பவானிகார்த்திக்