“என்னில் வந்து சேர நீ யோசிக்காத..” சாம் சி.எஸ் 37
இசை அமைப்பாளர் சாம் சி. எஸ் அவர்களின் பிறந்த நாள் இவர் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் தன்னுடைய திறமையை கொடுத்தவர்தான் சாம் சி.எஸ் தமிழில் மட்டும் இல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலம் பயணியாற்றியவர். இந்த பாடல்களுக்கு எல்லாம் இவர்தான் இசைஅமைச்சாரா அப்படினு ஆச்சிரியம் படும்படியாக இருக்கிறது இவருடைய இசை.
ஒரு ரவுடி தனமான பையனை, பணக்கார வீட்டு பெண் காதலிக்க இவனும் அவளை முழுவதுமாக காதலிக்க தொடங்குகிறான், ஆனால் இறுதியில் ஹீரோவை விடுத்து சென்றதும் அவன் இருக்கும் கோலங்களை பார்க்கும் பொழுது கண்களில் கண்ணீர் தோன்றும் கண்ணம்மா உன்னை என் மனசில் நினைத்து கொண்டு இருக்கிறேன் ஒரு பார்வை பார்த்து விட்டு போயேண்டி பெண்ணே,எனக்குள்ள ஒரு புது காதலை நீ தந்த மனதில் ஏற்படும் வலிகூட சுகந்தன் அப்படினு சொல்லிவிட்டு சென்றாயே, இசைஅமைப்பாளர் “சாம் சி. எஸ்” இசையில் பாடகர் அனிருத் ரவிசந்தர் பாடிய பாடல் இது.
கண்ணம்மா உன்ன
மனசில் நினைக்கிறேன்
பார்வை பாரடி
பெண்ணே..
என் கண்முன்னாடியை என்னை விட்டு நீ போகாத “என் கண்ணே என் உசுரை தவியாக தவிக்க விட்டு” புட்டாயே, நீ இல்லாம நன் இந்த சென்மத்தை எப்படி கடக்க போறேன் ஆசையை மட்டும் கொடுத்து விட்டு போயிட்டியே இந்த பாடலுக்கு “சாம் சி.எஸ்” இசைஅமைத்திருப்பர் பாடகர் பிரதீப் குமார்,பாடகி நேஹா வேணுகோபால் பாடிய பாடல்.
நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு..
தன்னுடைய தோழியின் சாவிற்கு ஹீரோதான் காரணம் என்று தப்பாக புரிந்து கொண்டு அவனை பழிவாங்கும் நோக்குடன் பழகுகிறாள் ஹிரோயின், மழை வருவதற்கு முன்பு ஒரு காற்று வீசும் அல்லவா அது போல உன்னை பார்க்கும் பொழுது எனக்கு தோன்றுகிறது, என் வார்த்தைகள் எல்லாம் மொழியை இல்லாமல் ஊமையாக போய்விடுகிறது காதலியே பாடகர் ஹரிச்சரன் ,பாடகி ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல் இது இந்த பாடலுக்கு சாம் சி. எஸ் இசையமைத்திருப்பர்.
மழைக்குள்ளே
நனையும் ஒரு காற்றை
போல அல்லவா மனம்
உன்னை பார்க்கும் போதில்
எந்தன் வார்த்தை ஊமை
எனவே மாறும் ..
பல்வேறு படங்களில் இசையால் நம்மை ரசிக்க வைத்த சாம் சி.எஸ் அவர்களுக்கு மதிமுகம் குடும்பத்தினர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்
STORY’S 50, WRITTEN – 300+