பழனி கோயில் பிரசாதம் குறித்து தவறான செய்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்…
பழனி கோயில் பிரசாதம் குறித்து தவறான செய்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழனி சுவாமி கோவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் கிருத்திகை, தை பூசம் மற்றும் பங்குனி உத்திரம் என விஷேச நாட்களில் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பழனி முருகன் கோயிலில் கெட்டுப் போன பிரசாதங்கள் வழங்கப்பட்டதாக பக்தர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
பழனி கோயிலில் வழங்கப்பட்ட லட்டு, அதிரசம் உள்ளிட்டவை கெட்டுப்போய் சாப்பிட முடியாதபடி இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து, பழனி கோயில் பிரசாதம் குறித்து தவறான செய்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழனி கோயிலில் தரமான பொருட்கள் கொண்டு பிரசாதம் தயாரித்து பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், உணவு பாதுகாப்புத்துறை சோதனை செய்து அனுமதி பெற்ற பிறகே பிரசாதம் விற்பனை செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.