கட்டிட தொழிலாளிகளை மிரட்டி.. சிசிடிவி ஆய்வுகளின் படி கைது..!
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பணிகள் நடைப்பெற்று வருகின்றது.இந்த கட்டிட பணியில் தீனதயாளன் (24) என்பவர் மேஸ்திரியாக பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் மூன்று பேர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அங்கு வேலை செய்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்கள் மற்றும் ரூ. 13,000 ரொக்கம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் மேஸ்திரியிடம் கூறியதை தொடர்ந்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அந்த காட்சிகளில் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன்(33), கர்ணா(25), அஜித்(23) ஆகிய மூன்று பேர் என தெரியவந்தது.
பின்னர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, 6 செல்போன்கள் மற்றும் பட்டாக்கத்திகள் போன்றவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தி சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்