தென் வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு இந்தியா பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே நிலையில் நீடித்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இலங்கை கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த மூன்று நாட்களான 21,22 மற்றும் 23ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுபாயின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த தினங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க தமிழகக் கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடாவிற்கும், தென்மேற்கு வங்க கடலுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.