கடன் தொல்லையால் பறிப்போன மூன்று உயிர்.. கொலையில் முடிந்த தற்கொலை…!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(39) என்வவர் ரைஸ் மில் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி கீர்த்திகா(32) என்ற மனைவியும் கோகுல்நாத்(14) என்ற மகனும் சாய் நந்தினி(11) என்ற மகளும் இருந்தனர்.
இந்தநிலையில் குடி பழக்கத்திறக்கு அடிமையான கிருஷ்ணமூர்த்தி சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் கீர்த்திகா அக்கம், பக்கத்தினரிடம் கடன் வாங்கி உள்ளார். அதுமட்டுமல்லாமல் பல சுய உதவி குழுகள் மூலமும் கடன் வாங்கியுள்ளார்.
பின்னர் வங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இருந்ததால் கடன்காரர்கள் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் மன உளைச்சலில் இருந்த கிருத்திகா கிருஷ்ணமூர்த்தி வெளியே சென்ற நேரத்தில் தனது மகன், மகளுடன் தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீடு திரும்பிய கிருஷ்ணமூர்த்தி மூன்று பேரும் பிணமாக இருப்பதை கண்டு கதறி துடித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மண்ணச்சநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 3 பேரில் உடல்களையும் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அதன்படி இதன் முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையான மன உளைச்சலில் இருந்த கிருத்திகா தனது குழந்தைகளை கொன்று பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
கடல் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன். மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்