ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மூன்று பேர் கைது..! விசாரணையில் வெளிவந்த பலதிடுக்கிடும் தகவல்கள்..!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் “ஆம்ஸ்ட்ராங்” கடந்த மாதம் ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது சகோதரர் பென்னை பாலு உட்பட 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர்.. அதில் 8 பேரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது..
24 பேரில் திருவேங்கடம் என்பவர் போலீசார் விசாரணையின் போது போலீசாரை தாக்க முயன்றதால் என்கவுன்டரில் சுடப்பட்டார். கைது செய்யப்பட்டவர்களில் பலரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர், சிலர் விசாரணையின் போது போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி துணைத் தலைவர் ஹரிகரன், அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு துணைச் செயலாளர் மலர்கொடி, திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், நூர் விஜய், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தமான், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி என 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்தில் மற்றும் சீசிங்ராஜா ஆகியோருடன் தொடர்பில் இருந்த சிவா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில்., அவரது போனில் இருந்து இயக்குனர் நெல்சன் மனைவிக்கு பலமுறை கால் செய்யபட்டிருப்பதும் 75 லட்சம் ரூபாய் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது..
இந்நிலையில் ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்., இந்த கொலை வழக்கில் இவர்களுக்கும் சம்மந்தம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதில் கோபி, குமரன் ஆகிய இருவரும் ஆந்திராவில் இருந்து நாட்டு வெடிகுண்டுகளை ரவுடி ராஜேஷிடம் கொடுத்துள்ளது தெரியவந்தது.
ராஜேஷ் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரிடமும் போலீஸ் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..