இந்த ஒரு விஷயத்தை தூக்கி போட்டாலே நிம்மதி கிடைக்கும் – குட்டி ஸ்டோரி..7
ஒரு ஊருல பாத்தீங்கன்னா ஒரு காக்கா தன்னோட இரையை வாய்னால எடுத்துட்டு காடு தாண்டி மலை தாண்டி பறந்து வந்துட்டு இருக்கு. பின்னாடியே மூணு கழுகு இந்த காக்காவை தொறத்தி வந்துட்டே இருக்கு.
இந்த காக்கா எப்படி தப்பிக்கணு அப்படினு சுத்தி சுத்தி போகுது ஆனா விடவே இல்ல. அந்த மூணு கழுகுமே இந்த காக்காவ பின் தொடர்ந்து வந்துட்டே இருக்கு. அப்போ இந்த காக்கா என்ன பண்ணுது மரத்து அடில ஒரு முனிவரை பாக்குது.
நேர அந்த முனிவர்கிட்ட போயிட்டு இந்த மாதிரி மூணு கழுகு வந்து என்ன விரட்டிட்டு வருது நீங்கதா காப்பாத்தனு அப்படினு சொல்லுது அதுக்கு அந்த முனிவர் என்ன சொல்லுறாரு..?
நீ வாயில இரையை வச்சிருக்க பாத்தியா அந்த இரைக்காத கழுகுகள் உன்ன தொறத்திட்டு வருது நீ அந்த இரையை தூக்கிபோற்று அப்படினு சொல்லுறாரு அந்த காக்கா என்ன பண்ணுது நம்ம கஷ்டப்பட்டு அந்த இரையை எடுத்துட்டுவந்தோம் எப்படி விட்டுக்கொடுக்குறது அப்படினு திரும்பவும் எடுத்துட்டு பறந்து போது.
அந்த காக்கவ அந்த மூணு கழுகுமே தொறத்திட்டு வருது., அந்த காக்க என்ன பன்றதுனு தெரியாம சரி அந்த இரையை தூக்கி போட்றுது அந்த கழுகு இரையை எடுத்துட்டு போயிருது..,
அதுக்கு அப்புறம் தான் நிம்மதியே வந்தது. அப்பா இனிமே நம்ம நிம்மதியா போலாம் அப்படினு அந்த காக்கா பறந்து போயிருது .
இதுல இருந்து என்ன புரியுதுனா.. “நமக்குள்ள இருக்குற சோகத்தை எப்போ தூக்கி வெளிய போடுராமோ அப்போதா நமக்கும் நிம்மதி வரும்“
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..