மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் மரணம்

திருப்பதூர் அருகே தினக்கூலி மின்சார ஊழியர் மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்நதவர் வெங்கடேசன். இவர், மின்வாரியத்தில் பழுதுபார்க்கும் தினக்கூலியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை பணிக்கு சென்ற அவர், பள்ளிப்பட்டு அருகே இருந்த வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக மின் கம்பத்தில் ஏறியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த வெங்கடேசனின் உறவினர்கள், உடன் வந்த மின்சார ஊழியர் பழனியை கைது செய்யக்கோரி உடலை எடுக்கவிடாமல் தர்மபுரி மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

What do you think?

‘என் சமூகவலைத்தள கணக்குகளை பெண்களுக்கு வழங்க தயார்’ பிரதமர் அதிரடி!

‘தேனாம்பேட்டையில் பரபரப்பு’ காவல்நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல்!