இடியமின்னின் இடி அப்டேட்..!! 5 மாவட்டங்களுக்கு மட்டும் வெள்ள அபாய எச்சரிக்கை..!!
தமிழகம் முழுவதும் இன்று கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.., அப்படி பெய்த கனமழையால் ஆற்றில் 65.06 செ.மீ நீர் உயர்ந்துள்ளது.., எனவே குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு மாவட்டம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், கடலூர், திண்டிவனம், மதுரை மற்றும் திருச்சி உட்பட்ட ஐந்து மாவட்டங்களில் ஆத்தோற பகுதிகளுக்கு மட்டும் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
இன்று முதல் இன்னும் ஐந்து நாட்களுக்கு 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது..,
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மேற்கண்ட அனைத்து மாவட்டங்களிழும் கனமழை வெளுத்து வாங்குமென சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை :
வளிமண்டல மேலடுக்கு பகுதியில்.., உருவாகியுள்ள காற்றின் சுழற்சி வேக மறுபாட்டு காரணமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..