சென்னையில் 2நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!!
மேற்கு திசையில் ஏற்பட்டிருக்கும் அதிக காற்றழுத்த காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 106டிகிரி வெப்பம் நிலவுவதால் இன்று மற்றும் நாளை அதிக வெப்பம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் காலை 11மணி முதல் மாலை 4மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது.
ஆனால் சென்னையில் இடியும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் சூறாவளி காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே இன்னும் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வுமையம் அறிக்கைவிடுத்துள்ளது.