டிக்கெட் கேன்சல் செய்தால் முழுத்தொகையும் ரிட்டன் – IRCTC அறிவிப்பு

ரயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்தால் அதற்காக அபராதத் தொகை வசூலிக்கப்படாமல் முழுத்தொகையும் திரும்பி வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மக்கள் பொதுவெளியில் ஒன்றுகூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாடாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.

ஐடி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க அனுமதித்துள்ளது. இதனால் பேருந்து, ரயில், விமானங்களில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளனர். அனைத்து விதமான போக்குவரத்துகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ரயில், விமானங்கள் அதிகளவில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று வரை 155 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த 155 ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் அபராதம் வசூலிக்கப்படாது என்று மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

முன்பதிவு டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்தால் அவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதுதவிர காய்ச்சல், இருமல், சளி இருக்கும் எந்தவொரு ஊழியரும் “இந்திய ரயில்வேயில் உணவு கையாளும் பணியில் ஈடுபடக்கூடாது” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What do you think?

’50 வயதுக்கு மேல் வெளியே நடமாட தடை’ மாநில அரசு அதிரடி உத்தரவு!

‘கொரோனா வைரஸ்’ ரஜினியின் புதிய டிவிட் !