டிக்-டாக்கில் மனைவியின் வீடியோ; கொலை செய்த கணவன்!

கடலூரில் டிக்டாக் மூலம் இளைஞர்களுடன் தொடர்பு வைத்திருந்த மனைவியை, அவரது கணவனே கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .

கடலூர் மாவட்டம் பன்ருட்டியைச் சேர்ந்தவர் குமரவேல். இவர் தனது மனைவி ராஜேஷ்வரி, இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். வாடகை கார் ஓட்டுநரான குமரவேல் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று விடுவதாக கூறப்படுகிறது. இந்த நேரங்களில், அவரது மனைவி ராஜேஷ்வரி அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து டிக்-டாக்கில் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதனால் அப்பகுதி இளைஞர்கள் பலருடனும் ராஜேஷ்வரிக்கு தொடர்பு ஏற்பட்டு, அவர்களுடன் தொலைபேசியில் நீண்டநேரம் பேசியுள்ளார். மனைவியின் இந்த நடவடிக்கைகள் பிடிக்காத குமரவேல் பலமுறை அவரை கண்டித்துள்ளார். ஆனால், ராஜேஷ்வரி இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இளைஞர்களுடன் பழகி வந்துள்ளார்.

இதன் காரணமாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மனைவி ராஜேஷ்வரியை குமரவேல் கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு, தனது குழந்தைகளுடன் பன்ருட்டிக்கு தப்பி சென்றுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் பன்ருட்டி பேருந்து நிலையத்தில் வைத்து குமரவேலை கைது செய்தனர். டிக்-டாக் விபரீதத்தால் மனைவியை கணவனே கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

“நீதிமன்றத்தில் எனக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி” – வைகோ பெருமிதம்!

4-வது நாளாக தொடரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்