டிக்டாக் மோகம்..! சிறைக்கு போக வைத்த காதல்..! பெண் போலீஸ் சிக்கியது எப்படி..?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த ராமர்- அன்னலட்சுமி தம்பதியரின் மகள்கள் தான் நித்யா மற்றும் ஸ்வேதா. அதே ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (65), இவருடைய மகன்கள் ராஜேந்திரன் (40), ராம்குமார் (35).
ராமர் குடும்பத்திற்கும், ராமசாமி குடும்பத்திற்கும் பல வருடங்களாக பணத்தால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 21ம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது.
அப்போது ராமசாமி, ராமரிடம், என் கிட்ட கடன் வாங்கிவிட்டு திருப்பி தராம இழுத்தடிக்கும் நீ எல்லாம் பேசவே கூடாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி, ராமரை கடுமையாக தாக்கி உள்ளார். அப்போது அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமசாமி, ராஜேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அதில் ராம்குமார் மற்றும் தப்பி சென்று தலைமறைவாகியுள்ளார்.
அந்த கொலை வழக்கில் தலைமறைவான ராம்குமாரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடியுள்ளனர். அதன் பின் ராம்குமாரை பெங்களூருவில் வைத்து கைது செய்துள்ளனர்.
அப்போது அவருடன் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மறுவாழ்வு முகாம் மற்றும் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலாவும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலா சிக்கியது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அது பற்றி காவல்துறையினர் வெளியிட்ட ராம்குமார் தகவலின் படி, ராம்குமார் அடிக்கடி செல்போனில் வித்தியாசமான டிக்-டாக், ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வீடியோக்களை பார்த்த இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலா அவருடன் நட்பாக பழக்க ஆரமித்துள்ளார். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதனால் அந்த கொலை சம்பவத்தன்று ஷீலாவும் ராம்குமாருடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ராமரின் கொலைக்கு உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை அறிந்த சத்தியஷீலா கொலை வழக்கில் சிக்காமல் இருப்பதற்காக காதலனுடன் பெங்களூருவிற்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவர்களை பிடிக்க காவல்துறையினர் வருவதை சுதாரித்த ராம்குமார் மற்றும் ஷீலா கோவாவிற்கு தப்பி செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
அதன் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சத்திய ஷீலா, ராம்குமார் தற்போது மதுரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கொலையாளிக்கு காவலர் துணையாக இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..