டிக்-டாக் வீடியோ எடுத்த மாணவன் கைது

புதுக்கோட்டை அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டிக்டாக் செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள து கருக்காகுறிச்சி கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அப்பகுதி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.இந்நிலையில் டிக்டாக் விடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள கண்ணன்,புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் டிக்டாக் செய்வது, மேலும் அவர்கள் மீது இடிப்பது, முகம் சுளிக்கும் வகையில் நடனம் ஆடுவது, போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வீடியோ எடுத்துள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் கண்ணனை கைது செய்தனர்.

What do you think?

கொரோனா வைரஸ்: தென்கொரியாவிலும் கணக்கை தொடங்கியதா!!!

அதிமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது : டிடிவி குற்றச்சாட்டு