YesBank-ல் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பு தான் 1,300 கோடி ரூபாயை எடுத்த திருப்பதி தேவஸ்தானம்!

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் YesBank-ல் இருந்து ஒரு மாத காலத்திற்கு முன்பு தான் 1,300 கோடியை எடுத்துள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

Yes Bank வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் மத்திய ரிசர்வ் வங்கி Yes Bank நிர்வாகத்தை 30 நாட்களுக்கு தற்காலிகமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த ஒரு மாத காலத்திற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து 50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு விதித்தித்துள்ளது.

இந்நிலையில் உலகின் பணக்கார கோரியிலாக கருதப்படும் திருப்பதி கோயில், இதனை நிர்வகிக்கும் தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளிலும் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். அந்தவகையில் YesBank ல் சுமார் 1,300 கோடி ரூபாய் மதிப்பிலான பணம்,தங்கத்தை டெபாசிட் செய்துள்ளது.

இந்த 1,300 கோடி ரூபாயையும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமலை திருப்பதி தேவஸ்தானம் Yes Bank இருந்து எடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி கூறுகையில், “வங்கியின் நிதிநிலை மோசமாக இருந்ததை தான் ஏற்கெனவே உணர்ந்ததாகவும், இதனால் அதை எடுத்துவிட்டதாகவும், வங்கியின் நிதி நிலையை எனக்கு முன்கூட்டியே புரியவைத்து பணத்தை பாதுகாக்க உதவிய இறைவனுக்குதான் அனைத்து நன்றியும் போய் சேரும்” என்றும் தெரிவித்துள்ளார்.

What do you think?

தம்பியுடன் பிகினி சூட் – சாராவின் வைரல் புகைப்படம்

மாசிமக விழா; புனித நீராடிய பக்தர்கள்