திருப்பதி லட்டில் கூட மோசடியா..? மாட்டு கொழுப்பு மீன் எண்ணெய்யா..? ஆய்வின் முடிவில் அதிர்ச்சி..!!
திருப்பதி பெருமாள் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்புகளால் தயாரிக்கபட்ட நெய்யில் செய்ததாக உறுதியாகியுள்ளது..
திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கால்நடை மற்றும் உணவு ஆய்வு நிறுவனம் குஜராத்தில் செயல்பட்டு வருகிறது. திருப்பதி பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு பிராசதமாக வழங்கப்பட்டு வரும் இந்த லட்டுவில் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது..
அதன் படி மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் திருப்பதி லட்டுவை பரிசோதனைக்காக எடுத்து சென்று நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்தது.
ஆய்வின் முடிவில் வெளியான அறிக்கையில், “திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்து இருப்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.. அதாவது பிரசாதமாக வழங்கபடும் லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவை கலக்கப்பட்டிருபது உறுதி செய்யப்பட்டுள்ளது..
அந்த ஆய்வின் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “திருமலை ஏழுமலையான் கோவில் மிகவும் புனிதமானது. இப்படி புனிதமான திருத்தலத்தில்
ஜெகன்மோகன் ஆட்சியில்., லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட்டுள்ளது., அந்த தகவலை அறிந்ததும் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் அப்போது லட்டை சோதனைக்காக அனுப்ப முடிவு செய்தோம் ஆனால் அங்கு அவர்களுடைய ஆட்சி நடைபெற்றதால் நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை..
கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை உடைத்து கடவுளின் பிரசாதத்தில் இப்படி ஒரு அவலகரமான வேலையை செய்ததற்காக ஜெகன்மோகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் வெட்கப்பட வேண்டும்.
திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன்மோகனால் இழிவுப்படுத்த பட்டுள்ளது. திருப்பதி லட்டுவின் தரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது., ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் இப்பொது அந்த அசுத்தத்தை தூய்மைபடுத்தி உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் மகனும் ஆந்திரப் பிரதேச ஐடி அமைச்சருமான நார லோகேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரசுவாமி கோயில் மிகவும் புனிதமான கோயில். ஜெகன் மோகன் ரெட்டி நிர்வாகம், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். அவர்களின் அரசு, மக்களின் மத உணர்வுகளை மதிக்கவில்லை” என விமர்சித்திருந்தார்.
ஆனால் இந்த செயலை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முழுவதுமாக மறுத்துள்ளது. அதற்கு ஆந்திராவின் மாநிலங்களவை உறுப்பினரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சுப்பா ரெட்டி எக்ஸ் தளத்தில், பதில் அளித்துள்ளார் “திருமலையின் புனிதத்தையும், பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் சேதப்படுத்தி சந்திரபாபு நாயுடு பெரும் பாவம் செய்துள்ளார். திருமலை பிரசாதம் குறித்த சந்திரபாபு நாயுடுவின் கருத்து மிகவும் மோசமானது. மனிதப் பிறவியில் பிறந்த எவரும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சொல்ல மாட்டார்கள்.
அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய சந்திரபாபு நாயுடு தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், திருமலை பிரசாதம் விஷயத்தில் நானும், எனது குடும்பத்தினரும் அந்த கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் சத்தியம் செய்யத் தயாரா..?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
திருப்பதியில் நாள் ஒன்றுக்கு மூன்று லட்சம் லட்டுகள் தயார் செய்யபடுகிறது. அதனை தயார் செய்ய திருப்பதி கோயில் அறக்கட்டளை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் இ-டெண்டர்கள் மூலம் அதிக அளவில் நெய்யை வாங்க முடிவு செய்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..