திருப்பதி கோவில் மூடப்பட்டது!

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸால் இந்தியாவில் 150க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி கோவில் இன்று மூடப்படுவதாகவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆனால் திருப்பதி கோவிலில் ஏகாந்தமாக அணைத்து பூஜைகளும் நடைபெறும் என்றும் தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.

What do you think?

‘கொரோனா வைரஸ்’ வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவிற்குள் வர தடை!

கொரோனா குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்?