லெட்டரில் வந்த தகவலால் பரபரப்பான திருப்பத்தூர்..!! யார் அந்த மர்ம நபர்..?
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்று தபால் மூலம் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கடிதம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அந்த கடிதத்தின் எதிரொலியாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட வெடிகுண்டு பிரிவு நிபுணர் காவல் உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமையில் வேலூர் மாவட்டத்திலிருந்து மோப்பநாய் பிரிவின் கீழ் ரீட்டா என்ற மோப்ப நாயும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏதேனும் வெடிகுண்டு ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ராஜாவை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்க்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அது கடிதத்தை நான் அனுப்பவில்லை மேலும் இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று விசாரணையில் தெரிவித்துள்ளார் இதன் காரணமாக கடிதத்தை அனுப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..