திருப்பூர் அருகே கோர விபத்து; மாணவர்கள் உட்பட 6 பேர் பலி

திருப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்திலிருந்து அவிநாசிக்கு சிமெண்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவிநாசி அருகே பழங்கரை தேசிய நெடுஞ்சாலையில் சேலத்திலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்ற டவேரா கார் ஒன்று லாரியின் பின்னால் வந்து பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த 5 மாணவர்கள், கார் டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், காரில் சுற்றுலாவுக்கு சென்ற மாணவர்கள் சேலம் விநாயகா பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

What do you think?

பைக் ரேஸில் அஜித்துடன் போட்டி போடும் ஹீமா குரேஷி!

புதிய சி.ஜி.எச்.எஸ் மருத்துவமனைகள்? – வைகோவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்