திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் தேரோட்டம்..!! உற்சாகத்தில் பக்தர்கள்
சென்னையில் பிரசிதி பெற்ற கோவில்களில் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில் புகழ் பெற்றது. கடந்த மே 4ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் ஒவ்வொரு நாளும், பல சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பல சிறப்பு பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை முதல் சூர்ணாபிஷேகமும், ஆனந்த விமான புறப்பாடும், அன்று இரவு யானை வாகன புறப்பாடும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று காலை 7:00 மணிக்கு தேர் திருவிழா நடைபெற்றது, இந்த தேரை பக்கதர்களும், மக்களும் பிடித்து இழுத்தனர். தேரில் எழுந்தருளிய பெருமாளை பலரும் தரிசனம் செய்தனர். விழாவில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மிக செய்திகள் பற்றி தெரிந்துக்கொள்ள., தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி