திருவண்ணாமலை தீபம் ஏற்றம்…! எதிரொலிக்கும் அரோகரா கோஷம்…!!
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக ஆன்மீகப் பெரியோர்களால் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆண்டுதோறும் பத்து நாட்கள் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் உலக பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நான்காம் தேதி கோயிலில் உள்ள 67 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவின்உச்சகட்டநிகழ்வான மகா தீபம் இன்று மாலை சரியாக 6:00 மணிக்கு அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலையேஅண்ணாமலையாகபோற்றப்படும் 2668 அடி உயர குன்றின்உச்சியில், ஆறரை அடி உயர கொப்பரையில்ஏற்றப்படுகிறது.
3500 கிலோ நெய், 1500 கிலோ காடா துணி கொண்ட திரி மற்றும் கற்பூரம் ஆகியவற்றைபயன்படுத்திஏற்றப்படும் இந்த தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மகா தீபதரிசனத்தை காண நாடெங்கிலுமிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள்வரக்கூடும் என எதிர்பார்த்து மாவட்ட நிர்வாகம் சார்பில், குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு, உள்ளிட்ட அனைத்துஅடிப்படை வசதிகளும்செய்யப்பட்டுள்ளன. 14,000 காவல்துறையினர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை நகருக்கு வரும் ஒன்பது சாலைகளிலும் 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கு வந்து சேரும் வகையில் இலவசசிற்றுந்துகளும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதிலுமிருந்து10ஆயிரத்து 109அரசுப்பேருந்துகளும் சிறப்புரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயில் கருவறையில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தை ஆயிரக்கணக்கானோர் அண்ணாமலைக்கு அரோகரா முழக்கத்துடன் தரிசித்தனர். திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தாலும் பொருட்படுத்தாது அதிகாலையிலிருந்தே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்14 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள தீபம் ஏற்றும் மலையைச் சுற்றி கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர்.
மாலை சுமார் 5 மணி அளவில் அண்ணாமலையார் கோயில் தங்கக் கொடிமரம் அருகில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளிய பின், இறைவன் ஒருவனே என்ற தாத்பரியத்தை வலியுறுத்தும் வகையில் ஏகன் அனேகனாகி அனேகன் ஏகனாகும் வகையில், பஞ்சபூதம் ஏற்றப்பட்டு அர்த்த நாரீஸ்வரர் காட்சியளித்த பின்பு சரியாக ஆறு மணிக்கு மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.
அச்சமயம் கோயிலின் உட்புறம் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டுமின்றி நகர் முழுக்க ஆங்காங்கே காத்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா முழக்கத்துடன் மகாதீப தரிசனம் செய்தனர். இது மட்டும் இன்றி நகர் முழுக்க வீடுகளில் அகல் விளக்கு கொண்டு தீபம் ஏற்றி மகா தீபத்தை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..