சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.19) வேளாண் பட்ஜெடை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நேற்று(மார்ச்.18)காலை 10 மணியளவில் தொடங்குகியது. இதில், 2022-23 நிதியாண்டிற்கான ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை இன்று(மார்ச்.19) அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
2022-2023ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்…
* வேளாண் தொழில் தொடங்க வேளாண் பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
* மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் ரூ.71 கோடியில் செயல்படுத்தப்படும்.
* கரும்பு சாகுபடிக்கு உதவித் தொகை வழங்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* சென்னை, திருச்சியில் எஞ்சிய நச்சு பகுப்பாய்வு மையம் அமைக்கப்படும்.
* தமிழகம் முழுவதும் 38 கிராமங்களில் ரூ.95 கோடி செலவில் மதிப்புக்கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் மையம் அமைக்கப்படும்.
* கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையானது டன்னுக்கு ரூ.195 உயர்த்தித் தரப்படும்.
* மழையிலிருந்து விவசாயப் பொருட்களைப் பாதுகாக்க 60,000 விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கப்படும்.
* ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கப்படும்.
* தஞ்சை, சேலம், திருவள்ளூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் சோயா சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இரண்டு மண்டலங்கள் உருவாக்கப்படும்.
* கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்க ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* வேளாண் துறையில், விதை முதல் விற்பனை வரை தெர்ந்துகொள்ளும் வகையில் ‘செயலி’ (app) உருவாக்கப்படும்.
* உரப் பயன்பாடு, பூச்சிக்கொல்லி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்க 7 விவசாய பயிற்சி மையங்கள் அமைப்படும்.
* விதை மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 30 ஆயிரம் மெட்ரிக் டன் விதைகள் வழங்கப்படும்.
* மயிலாடுதுறையில் ரூ.75 லட்சத்தில் மண் பரிசோதனைக் கூடம் அறிவிக்கப்படும்.
* வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி அரசு சார்பில் பரிசு வழங்கப்படும்.
* எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் சூரியகாந்தி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கப்படும்.
* கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலம் அமைக்கப்படும்.
* மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும்.
* மரம் வளர்ப்புத் திட்டத்திற்காக ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நெல் ஜெயராமன் 200 ஏக்கரில் பாரம்பரிய நெல் விதைகளை உற்பத்தி செய்து 20 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
* பயிர்க்காப்பீட்டு திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.2339 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* 9.26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடாக ரூ.2055 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* 7500 ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
* 2021 – 22ல் நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை.
* சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* காலநிலை மாற்றத்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தாங்கக் கூடிய மாற்றுப்பயிர் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 6 திட்டங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. அவையும் நீண்ட கால திட்டங்கள் என்பதால் இன்னும் முழுமை பெறவில்லை. 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது.
* தமிழகத்தில் விவசாயத்தை உச்சத்துக்குக் கொண்டு செல்ல இந்த பட்ஜெட் அறிவிப்புகள் உதவியாக இருக்கும்.
* விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வேளாண் துறைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.