நாளை கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் – சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்?

மானிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் 2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த மாதம் 14-ஆம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடர் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சபாநாயகர் தனபால் தலைமையில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில், நாளை முதல் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வை நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தொடரின் முதல் நாளான நாளை, மறைந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன், எம்எல்ஏக்கள் கேபிபி .சாமி, காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானமும், முன்னாள் எம்எல்ஏ சந்திரன் மறைவுக்கு இரங்கல் குறிப்பும் தெரிவிக்கப்பட்டு சட்டப்பேரவை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படும்.

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய அமைப்பினரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது சிஏஏவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாமியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைகளையும் பரிசீலித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை தொடங்கவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் சிஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

What do you think?

‘சீனாவில் கொரோனா வைரஸ் நோயாளிகள் தங்கிருந்த ஹோட்டல் இடிந்தது’ 4 பேர் பலி!

கொரோனா எச்சரிக்கை; பள்ளிகளுக்கு சுற்றறிக்கை