தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் 2023) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசு தமது முதலாவது இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. இதன் பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு 2-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தற்போது திமுக அரசு தாக்கல் செய்யும் 3-வது காகிதமில்லா பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்து வருகிறார்.
பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் இதோ…
- மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ₹1500 ஆக அதிகரிப்பு.
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ₹2000 ஆக அதிகரிப்பு - முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு. இதன் மூலம் தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
- நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை 20 லட்சம் ரூபாயில் இருந்து இருமடங்காக உயர்த்தி 40 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
- சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த ₹25 கோடி ஒதுக்கீடு
- ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் நிலைத் தேர்வுக்கு தயாராக மாதம் ரூ.7,500 முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு.
- 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.110 கோடி செலவில் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
- சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
- நடப்பாண்டை போலவே அடுத்த ஆண்டும் சர்வதேச புத்தக கண்காட்சி அமைக்கப்படும், புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட ரூ.7,000 கோடி ஒதுக்கீடு, நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ50 கோடி நிதி ஒதுக்கீடு ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
- பள்ளி கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
நேரலையில் பட்ஜெட் அறிவிப்புகளை அறிந்து கொள்ள…