அமைதியை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி; முதலமைச்சர் ஆவேசம் – CAB

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க எதிர்கட்சிகள் முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக நிதிநிலை அறிக்கையின் இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், மற்ற மாநிலங்களைபோல் தமிழகத்திலும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அவருக்கு பதில் அளித்த முதலமைச்சர், “தமிழகத்தில் எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பில்லை” எனத் தெரிவித்தார். எதிர்கட்சிகள் திட்டமிட்டே வதந்தியை பரப்பி, தமிழகத்தின் அமைதியை குலைக்க முயற்சிப்பதாகவும் அவர் சாடினார். “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கு பாதிப்பு என்பதை சுட்டிக்காட்டினால், அதற்குரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும்” அவர் ஆவேசமாக தெரிவித்தார்.

What do you think?

இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை! – CAB

டிக்-டாக்கில் சாகசம் செய்த இளைஞர்; அறிவுரை கூறிய பியூஸ் கோயல் – Tik-Tok