‘தமிழக மக்கள் கேரளாவுக்கு செல்லவேண்டாம்’ அமைச்சர் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழக மக்கள் கேரளாவுக்கு செல்வதைத் தவிர்க்கலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

உலகம் முழுவதும் 123 நாடுகளில் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸால் மொத்தம் 4,627 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1, 29 ,139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவிலும் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று தமிழக சட்டசபையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், ” நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், முதியவர்கள் ஆகியோர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் தமிழக நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்

மேலும் கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு செல்வது குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழக மக்கள் கேரளாவுக்கு செல்வதைத் தவிர்க்கலாம் என்று அறிவுறுத்தினார்.

அதே போல் கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இதுவரை 1,46,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

What do you think?

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு வர தடை – டிரம்ப் அதிரடி!