காரைக்குடி டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடந்த நில அளவையர் தேர்வில் ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்வாகி பணியில் சேர்ந்து வரும் விவகாரம் காரைக்குடி தனியார் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 742 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் இதில் – முறைகேடு நடந்துள்ளதா என்ற புகாருக்கு மைய இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி சார்பில் நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் என மொத்தம் 1,339 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத் தேர்வை எழுதினர். இந்த தேர்வில் ஐ.டி.ஐ., டிப்ளமோ சிவில், பி.இ., சிவில் மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.
இதில் காரைக்குடி ஸ்ரீராம் நகரில் இருக்கும் பிரமிடு என்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்த 4 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இதில் பிரமிடு பயிற்சி மையத்தை சேர்ந்த 742 மாணவர்கள் நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் பணியிடங்களில் தேர்ச்சி பெற்றனர். காரைக்குடியில் 13 பயிற்சி மையங்களில் தேர்வு எழுதிய இப்பயிற்சி மையத்தை சேர்ந்த 302 மாணவர்கள் தேர்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் உள்ள மையங்களில் தேர்வு எழுதி 742 பேர் தேர்வு பெற்றுள்ளனர்
இது குறித்து இப்பயிற்சி மைய நிறுவனர் கற்பகம் கூறியதாவது: எங்கள் பயிற்சி மையத்தில் 40 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பணிபுரிகின்றனர். பி.இ., சிவில் மாணவர்களுக்கு பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.இ., மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
பி.இ., சிவில் மட்டுமன்றி மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகள் அனைத்திலும் எங்கள் மாணவர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு தேர்விலும் மொத்த பணியிடங்களில் 60 முதல் 65 சதவீதம் மாணவர்கள் எங்கள் பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் தேர்வாகின்றனர். ஒரு முறை மட்டுமே கட்டணம் வாங்குகிறோம்.
ஓராண்டு பயிற்சிக்கு பிறகு அவர்களுக்கு சீனியர் என்ற ஒரு அடையாள அட்டை கொடுத்தால் அவர்கள் தொடர்ந்து நாங்கள் நடத்தும் தேர்வில் பங்கேற்ற அனுமதி அளிக்கிறோம். பெரும்பாலும் கிராமபுறத்தை சேர்ந்த ஏழை மாணவர்களே இங்கு பயில்கின்றனர். காரைக்குடியில் உள்ள சுற்றுப்புற சூழல் இவர்களை படிக்க தூண்டுகிறது. மையத்தின் இயக்குநர் கற்பகம் கணவர் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் சிவில் பாடப்பிரிவு பேராசிரியராக உள்ளது குறிப்பிடதக்கது