டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி, தேர்வு தேதி வெளியீடு..
தமிழகம் முழுவதும் 32 இடங்களில் டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி பதவிக்கான முதல்நிலை தேர்வு தொடங்கி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 245 சிவில் நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் அதை நிரப்புவதற்கான பணி தமிழகம் முழுவதும் 32 தேர்வு மையங்களில் 12,037 பேர் எழுதியுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி பதவிக்காக இன்று காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 12 தேர்வு மையங்கள் 4,044 பேர் சிவில் நீதிபதி பதவிக்கு தேர்வாகியுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி எழுத்துத் தேர்விற்கான தேதிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எழுத்துத் தேர்வு, சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு செயல் முறையின் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. டிஎன்பிஎஸ்சி Civil Judge Prelims எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 19ம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது.
எழுத்துத் தேர்வு விண்ணப்பதாரர்களின் அறிவு, புரிதல், பகுப்பாய்வு திறன்கள் மற்றும் சட்டப் பகுத்தறிவு திறன் ஆகியவற்றின் மதிப்பிடுகளை வைத்து, எழுத்துத் தேர்வில் வெற்றிபெறும் விண்ணப்பதாரர் களுக்கு மட்டுமே, டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி முதன்மைத் தேர்வு எழுத முடியும்.
இந்த தேர்வு அக்டோபர் 28 மற்றும் அக்டோபர் 29ம் தேதி நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசி தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..