TNPSC தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்..!! இனி ஈஸியா பாஸ் ஆகலாம்..!!
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனில் போட்டிதேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்பொருள் தொடர்பில், TNPSC GROUP I முதல்நிலை போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளானது திங்கள் – வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகின்றது.
தற்போது நடத்தப்படவுள்ள பயிற்சி வகுப்பின் விவரங்கள் பின்வருமாறு :
அண்மையில் வெளியான TNPSC GROUP I முதல்நிலை போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் TNPSC Group I Preliminary இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் திரு.பா.விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.