டி.என்.பி.எஸ்.சி முறைகேடு – சிபிசிஐடி வலையில் மேலும் 4 பேர்

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தொடர்புடைய 4 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று ஒரே நாளில் கைது செய்துள்ளனர்.

குரூப் 4 முறைகேட்டைத் தொடர்ந்து குரூப் 2 ஏ முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் விசாரனையில் இருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமார், காவலர் சித்தாண்டி ஆகிய இருவரும் அளித்த தகவலின் அடிப்படையில், கரூர் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த மேலும் 2 அரசு ஊழியர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் அவர்களை கைது செய்துள்ள சிபிசிஐடி காவல்துறையினர், அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன், முசிறியைச் சேர்ந்த விமல்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குரூப் 4 முறைகேட்டில் தொடர்புடைய 19 பேரும், குரூப் 2 ஏ முறைகேட்டில் தொடர்புடைய 16 பேரும் என மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

What do you think?

ரயில்வேயில் 2 ஆம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்? வைகோவின் கேள்விக்கு, மத்திய அமைச்சர் விளக்கம்

இந்தியாவை பழிதீர்த்த நியூசி, 2 – 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்!