டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்புடைய 4 பேரிடம் தீவிர விசாரணை – சிபிசிஐடி

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதையடுத்து 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், அவர்கள் தேர்வுகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி, இடைத்தரகர்கள் ஜெயக்குமார், ஆயுதபடை காவலர் சித்தாண்டி உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோரை இதுவரை கைது செய்துள்ளது.

தேர்வு மோசடிகளுக்கு மூளையாக செயல்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமாரிடம், நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் அவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததுள்ளது. இதில் கிடைத்த பணத்தைக்கொண்டு சென்னை அண்ணாநகர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்ததும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

குரூப் 4 மட்டுமல்லாது குரூப் 2 ஏ தேர்வுகளிலும் ஜெயக்குமார் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனிடையே, 2016 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்விலும் முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் அறியூரைச் சேர்ந்த நாராயணன் என்பவரை சிபிசிஐடி கைது செய்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோசடியில் தொடர்புடைய மேலும் 4 பேரை சென்னைக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறது.

What do you think?

ரசிகர்களுடன் கெத்து காட்டிய விஜய் – சம்மன் அனுப்பிய வருமானவரித் துறை

விஜய், சூர்யாவுடன் மோத காத்திருக்கும் தனுஷ்?