பெண்களின் கண் அழகிற்கு அழகு சேர்க்க.. ஒரு ரகசியம்..!!
பெண்களின் அழகை எடுத்து சொல்ல.., புண்ணகை, கூந்தல் அழகு, இடை அழகு என பல இருந்தாலும்.., கண்களின் அழகிற்கு தனி சிறப்பு தான். அந்த கண்களை என்றும் அழகாக பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒன்று. அதற்கான சில டிப்ஸ் களை பார்க்கலாம்.
* தினமும் காலை எழுந்தவுடன் தண்ணீர்ல் முகம் கழுவி விட்டு, பன்னீரால் முகத்தை துடைக்க வேண்டும். இப்படி செய்தால் முகம் என்றும் பொலிவுடன் இருக்கும்.
* கண் இமையின் மேல் பன்னீரை தொட்டு.., மசாஜ் செய்த படி தேய்த்து முகம் கழுவினால், கண் இமையின் நிறம் மாறும்.
* வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது வட்டமாக நறுக்கியோ கண்களின் மேல் 15 நிமிடங்கள் வைக்க வேண்டும். வாரத்திற்கு இருமுறை இப்படி செய்தால் கண்களுக்கு தேவையான குளிர்ச்சி கிடைக்கும்.
* ஜாதிக்காயை சந்தனக்கல்லில் அரைத்து இரவில் பூசி காலை குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். வாரத்திற்கு இருமுறை இப்படி செய்தால், கருவளையம் மறையும்.
* கம்ப்யூட்டர் மற்றும் தையல் வேலை செய்யும் பெண்கள்.., தொடர்ச்சியாக வேலை செய்துக் கொண்டு இருக்க கூடாது 3 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது.., மரம், செடி, என இயற்கை வளங்களை பார்க்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி பார்க்க தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி