பிறந்த குழந்தைக்கு அடிக்கடி வரும் விக்கலை சரி செய்ய – சில டிப்ஸ்..
பிறந்த குழந்தைகளுக்கு விக்கல் வருவது இயல்பு, அதை பற்றி அம்மாக்கள் பயப்பட வேண்டிய தேவையில்லை. ஆனால், மாதம் முழுவதும் விக்கல் வந்துக்கொண்டே இருந்தால் குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். சாதரணமாக ஏற்படும் விக்கலை தடுப்பதற்கான சில குறிப்புகளை பார்க்கலாம்.
குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும் பொழுதோ, சாப்பிட்ட பின்னரோ விக்கல் வந்தால் பயப்பட வேண்டாம். அதற்கான காரணம் குழந்தைகள் அவர்களை அறியாமல் அதிக வெளிக்காற்றை சுவாசிப்பது தான்.
வெளிக்காற்றை சுவாசித்து உள் இழுக்கும் பொழுது, அதிகாற்றை விழுங்கி விடுகின்றன. இதனால் வயிற்றில் உள்ள வாயு விக்கலை ஏற்படுத்துகிறது.
விக்கல் ஏற்ப்படாமல் இருக்க குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தும். குழந்தையின் முதுகில் நன்கு தட்டி விட வேண்டும்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது இருக்கைகளில் சரியாக தூக்கி வைத்துக்கொண்டு கொடுக்க வேண்டும். குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை, குழந்தைக்கு படுத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கலாம்.
ஒரு வயதிற்கு பின்னரோ அல்லது தாய்ப்பாலிற்கு பதிலாக பால் புட்டியில். அதன் நிப்பிலில் பால் சொட்டு சொட்டாக வரும் படி இருக்க வேண்டும்.
தொடர்ச்சியாக பாலோ அல்லது, தண்ணீரோ வெளியேறும் படி பெரிய துளை இருந்தால். அது குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கும்.
ஒரு சிலர், குழந்தைக்கு விக்கல் வரும்போது தாய்ப்பால் கொடுக்க கூடாது என்பார்கள். அது தவறு. விக்கல் வரும்போது தாய்ப்பால் கொடுக்கவேண்டும்.
ஆறு மாதத்திற்கு பிறகு, கொதிக்கும் தண்ணீரில் ½ டீஸ்பூன் சோம்பை வைத்து கொதிக்க விட வேண்டும். அந்த தண்ணீரை 2,3 டீஸ்பூன் குழந்தைக்கு கொடுத்தால் விக்கல் நிற்கும்.
பிறந்த குழந்தைக்கு அடிக்கடி விக்கல் வருகிறது என்றால். நீங்கள் அதிகமாக தாய்ப்பால் கொடுப்பது தான் காரணம். குழந்தைக்கு சரியான அளவில், இடைவேளை விட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைக்கு விக்கல் ஏற்படும்போது, ஓமம் தண்ணீர் கொடுக்கலாம். இதனால் விக்கல் மட்டுமின்றி குழந்தைகளுக்கு வயிற்று வலி, வாயு பிடிப்பு போன்றவற்றையும் சரி செய்யும்.