அடிக்கடி பதட்டம் அடையும் மனதை சரி செய்ய..! சில டிப்ஸ்
ஒரு செயலை செய்வதற்க்கு முன்னும் பின்னும் நம் மனது பதற்றம் அடையும், அதை சாதாரணமாக நாம் விட்டு விடுகிறோம் ஆனால் அவை நம் உடலுக்கு ஆபத்து என்பது எத்தனை பேருக்கு தெரியும்..?
அதிக மனஅழுத்தம் மற்றும் மனக் கவலையால் இந்த பதட்டம் ஏற்படுகிறது. அப்படி பதட்டம் ஏற்படும் பொழுது, உப்பு நிறைந்த பொருளோ அல்லது அதிக உப்பு நிறைந்த பொருளோ எடுத்துக்கொள்ள சொல்லுவார்கள்.
ஆனால் அப்படி எடுத்துக் கொண்டால். அந்த நிமிடம் மட்டும் சரியாகி விடும். இதை தொடர்ச்சியாக செய்யும் பொழுது மூளைக்கு சென்று ஒரு குறுகிய சரளத்தை ஏற்படுத்துகிறது.
பதப்படுத்த பட்ட இறைச்சிகள், அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள், உங்களின் கவலைய அதிகரிக்க செய்யும். ஆனால் இதை சரி செய்வதற்காகவும் சில உணவு பொருட்கள் இருக்கின்றன. அதை பற்றி பார்ப்போம்.
முந்திரி : தினமும் 4 முந்திரி பருப்பு எடுத்துக்கொள்ளும் பொழுது மனம் அமைதியாக இருக்க வழி செய்கிறது.
இதில் மெக்னீஷியம் இருப்பதால் நரம்புகள் தளர்வு அடையாமல் இருக்க வழி செய்கிறது.
பெர்ரி பழம் : பெர்ரி பழத்தில் ஆக்ஸிஜனேற்றம் அதிகம் இருப்பதால் மனம் பதட்டம் அடையும் பொழுது.
ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தில் இருந்து மூளையை பாதுகாக்கிறது.
சால்மன் மீன் : சால்மன் மீனில் கொழுப்பு தன்மை அதிகம் இருப்பதால், கவலைக்கான அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
அவகேடோ : அவகேடோ பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் இருப்பதால், பதட்டத்தை குறைக்க உதவுகிறது.
டார்க் சாக்லேட் : டார்க் சாக்லேட்டில் உள்ள ஃபிளவனாய்டுகள் மன நிலையை அதிகரிக்கச் செய்கிறது.
கீரீன் டீ : கீரீன் டீயில் அமினோ அமிலம் இருப்பதால், தளர்வை குறைத்து தூக்கத்தை மேம்படுத்துகிறது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள, தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி