மார்பக புற்று நோய் வராமல் தடுக்க..!!
குழந்தை பிறந்த பெண்களில் பலருக்கும் இருக்கும் கேள்வி.., தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக புற்றுநோய் ஏற்படுமா என்பது தான்.., இதுகுறித்து விளக்கம் கொடுக்கிறார் மருத்துவர் மு.ஜெயராஜ்.
குழந்தை பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆறுமாதத்திற்கு பின்.., தாயிப்பாலுடன் கூடுதல் உணவுகள் கொடுத்து பழக வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
தாய்ப்பாலில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் மற்றும் நீர் என அனைத்தும் இருக்கும். ஒரு குழந்தைக்கு தேவையான அனைத்தும் தாய்ப்பாலில் கலந்து இருப்பதால் ஆன்டிபாடி மற்றும் கனிமங்கள் காணப்படும்.
கருத்தரிப்பு காலத்தில் 10-16 கிலோ வரை எடைக் கூடும், குழந்தை பிறந்த பின் தாய்ப்பால் கொடுப்பதால், உடலில் படிந்துள்ள கொழுப்பு சக்திகளை கரைத்து, முன் இருந்த உடல் எடையை திரும்ப பெற உதவுகிறது.
தாய்ப்பாலூட்டும் தாய் மார்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவாகவே இருக்கும். மேலும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறைவாகவே காணப்படும்.
எனவே தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கும், தாய்ப்பாலை குடிக்கும் சேய்க்கும் எந்த விதமான நோயும் இன்றி நலமாக இருப்பார்கள்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் பற்றிய முக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி