கூந்தல் உதிர்வை குறைக்க.. ஒரு ரகசியம்..!!
கூந்தல் உதிர்வு பிரச்னை இல்லாத ஆண்களோ பெண்களோ பார்க்கவே முடியாது..
தினமும் தலை வாரும் பொழுது.., இவ்வளவு முடி பாலாக போகிறதே என்று புலம்பி கொண்டே இருப்பவரா.., நீங்கள்..! அப்போ இது உங்களுக்கு தான்.
சமையலில் வெங்காயம் எவ்வளவு பயன் உள்ளதாக இருக்கிறதோ.., அதே அளவிற்கு கூந்தல் உதிர்வு, நீரிழிவு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றிலும் மிகுந்த பயன் அளிக்கிறது.
வெங்காயத்தில் பொட்டாசியம், கந்தகம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் பி, வைட்டமின் சி போன்ற பல்வேறு சத்துக்கள் இருப்பதால்.., கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தி, முடி வளர உதவி செய்கிறது.
வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, அதன் பின் குளிர்ந்த நீரில் தலையை அலச வேண்டும்..
இதுவே கூந்தல் உதிர்வை குறைப்பதற்கான டிப்ஸ்..
வெங்காயத்தின் சாறை உபயோகிக்க பிடிக்காதவர்கள்.., ஹேர்ப்பாஃல் (Hair Fall ) மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இது போன்ற பல குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி