மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு பொருளாதார மேம்பாடுகள் ஏற்படும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்குவார்கள். தொழில் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியியல் சிறப்படைவார்கள். கடன் சுமைகள் தீரும். சகோதர வழி உறவுகள் ஆதரவு இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம் என்பதால் உடல் நலனில் கவனம் தேவை. தொலைதூரப் பயணங்களை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு விருப்பங்கள் நிறைவேறும். எடுத்த காரியங்கள் சுலபத்தில் வெற்றிகரமாக முடியும். நண்பர்களால் தன வரவு ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு இன்பங்கள் பெருகும். பொருளாதார கஷ்டங்கள் தீரும். வாழ்க்கைத் துணை ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் லாபங்கள் இருக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு பணியிடங்களில் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். பழைய நண்பர்களால் நன்மைகள் உண்டாகும். சிலர் விருந்து விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு உடல் நலம் சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பால் அனுகூலங்கள் இருக்கும். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளால் லாபம் ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு துன்பங்கள் ஓடிப்போகும். திருப்திகரமான பொருள் வரவு இருக்கும். தொழில், வியாபாரங்களில் எதிர்ப்புகள் நீங்கும். கலைத் தொழிலில் இருப்பவர்கள் வெளிநாடு செல்வார்கள். குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்குவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு யோகமான நாளாக இருக்கும். எதிர்பாராத பண வரவு ஏற்படும். உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். சிலர் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு செல்வீர்கள். பால்ய கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு கவலைகள் தீரும். உங்கள் திறமையால் நன்மைகளைப் பெறுவீர்கள். திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெண்களால் தன வரவு உண்டாகும். வாகனங்கள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நினைத்தது நிறைவேறும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தாராள பண வரவு உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு வார்த்தைகளில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற போராட வேண்டியிருக்கும். சராசரியான பொருள் வரவு உண்டு. தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி நிலவும். பெரியவர்களின் ஆதரவு இருக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு புதிய முயற்சிகள் வெற்றி பெறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரங்களில் புதிய முதலீடுகள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.