இன்றே கடைசி நாள்..! மாணவர்கள் கவனத்திற்கு..!!
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவு:
தமிழ்நாடு, புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது..,
இந்த ஆண்டு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருந்தனர் .
இந்த ஆண்டு பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி 598/600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைய்துள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவிகிதம் 94.56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.
தேர்வுதுறை அறிவிப்பு :
இந்நிலையில் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக உள்ள மாணவர்களும், மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களும் மறு விண்ணப்பம் செய்யலாம் என அதாவது.,
விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு இன்று முதல் வரும் 11-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மேலும் விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும், விடைத்தாள் நகல் பெற்றவர்களுக்கு மட்டுமே மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்துக்கு விடைத்தாள் நகல் பெற 275-ரூபாயும், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு 305- ரூபாயும், பிற பாடங்களுக்கு 205- ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கும்போது, வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறெதேனும் சந்தேகங்கள் இருந்தால் TN.RESULTS என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..